விஜய் 8 மாதத்திலேயே சென்னையில் இருந்த அரசு மருத்துவமனையில் பிறந்தவர்.
விஜயின் தந்தை அவரை மருத்துவராக ஆக்க வேண்டும் என ஆசைப்பட்ட போது, விஜய் நடிக்கவே ஆசைப்பட்டு உள்ளார்.
நடிப்பதற்கு தந்தை தடுத்ததால் விஜய் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி பின்னர் பல இடங்களில் தேடி பட்டு கண்டுபிடிக்கப்பட்டவர்.
விஜய்க்கு பண தேவை ஏற்பட்டால் தாயின் மடியில் படுத்துக்கொண்டு பணத்தேவையை கூறி பெற்று செல்வதையும், அப்போது தாயின் முத்தத்தை பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கல்வியின் அவசியம் குறித்து நடிகர் சூர்யா ஆல்பம் படம் எடுத்த பொழுது அதில் விஜய் நடித்துள்ளார்.
30க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய விஜய் முதன்முதலில் பாடியது ரசிகன் திரைப்படத்தில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்ற பாடலாகும்.
தனது மக்கள் தொடர்பாளரை தயாரிப்பாளராக மாற்றிய ஒரே இந்திய நடிகர் விஜய் மட்டுமே.
படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் சமையலறையில் அதிக நேரத்தை செலவிடுவது விஜய்யின் பழக்கம்.
விஜய் இருக்கும் நீலாங்கரை வீடு ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் வீட்டின் தோற்றத்தை போன்றதாம்