பாப் உலகத்தோட கடவுள் பாப் பாடகர்கள் எல்லாம் தந்தை என சொல்லப்படும் அளவுக்கு. அதனுடன் காந்தக் குரலால் பல கோடி ரசிக பெருமக்களை சம்பாதித்தவர்தான் மைக்கேல் ஜாக்சன். ஜாக்சன் பெயர், புகழ், பணத்தோடு இருந்த அவருக்கு கூடவே பல பிரச்சனைகளும் இருந்தது. சிறுவர்களை பாலியல் வன்புணர்வு செய்ததாக இவர் மீது சில குற்றச்சாட்டுகள் இருந்துச்சு. இவர் மேல இன்னும் சில சந்தேகங்கள் இருந்துச்சு. அதுதான் அவருடைய சர்மம். பெரும்பாலானவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி வார்த்தையே பரிச்சயமானதுக்கு இவர் தான் காரணமாம். நிறைய முறை தன்னோட முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மாத்தி அமைத்துள்ளார்.
தனது காதலியின் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலமாக மாற்றி அமைத்துக் கொண்டார் என சொல்லப்படுகின்றது. ஆனால் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன்னாடியே இவருக்கு ஒரு நோய் இருந்து இருக்கு. அதுதான் வெண்புள்ளி நோய் அப்படின்னு சொல்றாங்க. 1982 ஆம் ஆண்டு வெளியான மைக்கேல் ஜாக்சனோட திரில்லர் ஆல்பத்திலும் 1995ல் வெளியான ஹிஸ்டரி ஆல்பத்திலும் மைக்கேல் ஜாக்சன் உடல் தோற்றத்தில் பெரும் வியப்பை தான் பார்க்க முடியும். வெண்புள்ளி என்று சொல்லப்படும் நோய் இவருக்கு ஏற்கனவே இருந்துச்சு அப்படின்னு பலரும் சொல்லிட்டு இருந்தாங்க. இந்த நோய் மட்டுமல்லாமல் மைக்கேல் ஜாக்சன் இன்னொரு நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளார்.
அந்த நோய் ஒரு நபருடைய சருமத்தை சிவக்க செய்யும். அதாவது வெள்ளையா இருந்தா அவருடைய உடலில் ஆங்காங்கே சரும நிறமும் ரொம்ப சிவந்து காணப்படும். அந்த நபருடைய சரும நிறம் தன்மையானது ரொம்ப பாதிக்கப்படும். 1993 வெளிப்படையாகத் எனக்கு ஒரு பாதிப்பு இருக்கு அப்படின்னு மைக்கேல் ஜாக்சன் முதன்முறையா சொல்லியிருந்தார். அப்போ பலருக்கும் மைக்கேல் ஜாக்சன் இப்படி ஒரு பிரச்சனையில் அவதிப்படுவது தெரியாது. ஒரு பேட்டியில் சில சமயம் நம்ம எதையும் மாற்ற முடியாது. உதவி பெறவும் முடியாது. சில சமயம் உண்மை என்னன்னு தெரியாம மக்கள் எழுதிய கட்டுரைகள் என்று ரொம்பவே புண்பட வைக்கிறது. இது எனக்கு இருக்கிற ஒரு பிரச்சனை என்றால் அதை கட்டுப்படுத்த முடியாது அப்படின்னு சொல்லி இருக்காரு.
1984வது வருஷத்துல தான் முதன்முறையாக சிறப்பு சர்மா சிகிச்சை மருத்துவர் மூலமாக மைக்கேல் ஜாக்சனுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருக்கு அப்படின்னு பரிசோதனை செய்யப்பட்டு கண்டறியப்பட்டது. சில பேரு இது மொத்தமும் பொய் அப்படின்னு சொல்லி இருக்காங்க. மைக்கேல் ஜாக்சனும் வெள்ளையா ஆகணும்னு தொடர்ந்து பிளிச்சு பண்ணிட்டு இருந்தாரு அதோடு நிறைய மருத்துவ பானங்களை குடித்து வந்தார். மைக்கேல் ஜாக்சன் தன்னோட புருவமும் கண் இமைகளும் மூக்கு பகுதியில் பல முறை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணி இருக்காரு அப்படின்னு சொல்லப்பட்டது. ஆனால் மைக்கேல் இறந்ததற்குப் பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் ஜாக்சனுக்கு வெண்புள்ளி நோய் இருந்தது உண்மைதான்.
அவருடைய முகம் மார்பு வயிறு மற்றும் தோல் பகுதிகளில் அதற்கான அறிகுறிகள் இருந்தது அப்படின்னு சொல்லி இருக்காரு. இந்த வெண்புள்ளிகள் தென்பட ஆரம்பிச்ச உடனேயே மயங்கும் தன்னோட மொத்த தோற்றத்தையே மாற்றி விட்டார். அதாவது முகம் மட்டும் தெரியும் மாதிரி கை கால் கழுத்து எந்த ஒரு பகுதியையும் தெரியாத அளவுக்கு கிளவுஸ், ஷூ, ஜாக்கெட் எல்லாத்தையும் மறைக்க ஆரம்பிச்சாரு. மைக்கேல் ஜாக்சன் உடல் பரிசோதனை செய்து முடித்த பிறகு, அவர் தன்னுடைய இதழ்களை பிங்க் நிறத்திலும் புருவத்தை கருப்பு நிறத்திலும் டேட்டோ செய்திருப்பது தெரியவந்துள்ளது இதற்கும் அந்த வெண்புள்ளி நோய் தான் காரணமா இருக்கணும் அப்படின்னு சொல்லப்பட்டது.