கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரின் உறுப்புகள் ஏழு பேருக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது.
பழனியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் என்பவரின் மனைவி பிரமிளா. பிப்ரவரி 19ஆம் தேதி இரவு பாலசமுத்திரத்தில் பொருட்களை வாங்கிவிட்டு மினி பேருந்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய போது கீழே விழுந்து காயம் அடைந்தார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பிப்ரவரி 20ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தாகவும் அவர் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் நல்ல நிலையில் இருந்ததால், உறுப்பு தானம் வழங்க அவரது மகன்கள் ஒப்புக் கொண்டதால் மருத்துவ குழுவினர் 5 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து உடல் உறுப்புகளை அகற்றினர். இதில் இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு சிறுநீரகம், கல்லீரல் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.