Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் குறையுமா அபராதம்…. ஏக்கத்தில் வாகன ஓட்டிகள்…. போக்குவரத்துத்துறை அமைச்சர் விளக்கம்…!!

தமிழகத்தில் போக்குவரத்து விதி மீறலுக்கான அபராதத்தை  குறைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

புதிதாக திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் 2019 இன் படி மாற்றி அமைக்கப்பட்டு உள்ள போக்குவரத்து அபராத தொகை மிகவும் அதிகமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் போக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை மாநில அரசுகள் தங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டு திருத்தி அமைத்துக் கொள்ளலாம் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார்.

Image result for புதிய வாகன திருத்த

இந்நிலையில் தமிழகத்தில் அபராத தொகை குறைக்கப்படுமா என்பது குறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில், முதலமைச்சர் போக்குவரத்து செயலாளர், தலைமை செயலாளர் ஆகியோருடன் கலந்து  ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுள்ளார் சட்டத்தில் இடம் இருந்தால் தமிழகத்தில் அபராதம் குறைப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |