கொரானா பரவலை சாமர்த்தியமாக சமாளித்த ஜெர்மனி தற்போது தடுப்பூசி போடும் பணியில் திணறி வருகிறது.
ஜெர்மனி கொரோனா காலகட்டத்தை சாமர்த்தியமாக எதிர்கொண்டது. அதற்காக மற்ற உலக நாடுகள் ஜெர்மனியை பாராட்டியது. இந்நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. மாதம் ஒன்றிற்கு ஜெர்மனியின் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டும்தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆனால் இஸ்ரேல் நாடுகளில் ஒரு நாளைக்கு இரண்டு சதவீத பேருக்கு தடுப்பூசி போட்டு, தடுப்பூசி போடும் திட்டத்தில் முன்னிலை வகிக்கிறது.
பிரிட்டனில் இதுவரை 7 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் ஜெர்மனியில் 1.8 மில்லியன் பேருக்கு மட்டுமே இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் ஜெர்மன் மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுப்பதற்காக அந்நாட்டு அரசியல்வாதிகள் சிலர் மட்டமான செயல்களில் இறங்கினர். பிரிட்டினின் தயாரிப்பான ஆக்ஸ்போர்டு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி சரியாக வேலை செய்யவில்லை என்ற பொய்யை பத்திரிக்கையாளர்களிடம் சிலர் பரப்பி உள்ளார்கள்.
இச்செய்தி பெரும்பாலான ஊடகங்கள் வெளிவந்தது. இதற்கு அஸ்ட்ரா ஜெனகா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜெர்மன் மற்றும் பிரிட்டானிய அரசாங்கங்கள் மறுப்பு தெரிவித்தது.இதனால் அந்தப் போலி செய்தி ஊடகங்கள் அதன்பின் வெளியிடவில்லை. இருப்பினும் அந்த செய்தியை சிலர் பரப்பிக் கொண்டுதான் வருகிறார்கள்.
இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனகாவில் உற்பத்தி குறைந்து விட்டதால் ஐரோப்பாவிற்கு தடுப்பூசி வழங்கும் பணி தாமதம் ஆகும் என்று தெரிவித்ததால் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கோபத்தில் உள்ளனர். ஐரோப்பா ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லியன் இதுகுறித்து கூறியதாவது, ஐரோப்பிய ஒன்றியம் தடுப்பூசி தயாரிப்பதற்கான நிதியுதவியை ஆரம்பத்திலேயே தந்ததுள்ளது. எனவே தாங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றி தடுப்பூசியை அனுப்ப வேண்டும் என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி காட்டியுள்ளார்.