அரசு பெயரில் செயல்படும் போலியான வலைதளங்களிடமிருந்து மக்கள் எச்சரிக்கையாக கவனமாக இருக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சமீபத்தில் லாக்டவுன் காலகட்டங்களில் மக்கள் மொபைல் போனில் அதிகமாக தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர். எனவே அவர்களது மனதை குழப்பிக் மொபைல்போன்கள் மூலமே மோசடி வேலைகளை எவ்வாறெல்லாம் மேற்கொள்ளலாம் என சில கும்பல்கள் இணையதளங்களில் சுற்றி வருகின்றனர். அந்த வகையில்,
தேசிய கல்வி உதவித்தொகை தேர்வின் மூலம் மாணவர்களுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும் என பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம் கீழ் இயங்குவதாக சொல்லப்படும் போலி இணையதளம் மூலம் பரவும் தகவல் தவறானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை எனக் கூறிய மத்திய அரசு, அந்த வலைதளம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மக்கள் அதனை உண்மை என நம்பி அதற்காக தங்களது தகவல்களை தெரிவிக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியக் கூடும் மக்கள் முடிந்த அளவுக்கு எது உண்மை எது பொய் என்பதை தெரிந்து செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.