Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனாவிலும் பொய்க் கணக்கு – முக.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு …!!

கொரோனாவிலும் பொய்க் கணக்கு எழுதி அப்பாவி பொது மக்களை ஏமாற்றாதீர்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்தியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின்தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தொடர்ந்து 10 நாட்களாக 500க்கும் மேல் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக 500க்கும் கீழாக குறைந்தது. மொத்த பாதிப்பு 10,000யை கடந்துள்ள தமிழகத்தில் அதிகமான பரிசோதனை நடத்தியதால் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகின்றது என்று அரசு தெரிவித்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டது என்று, பரிசோதனை குறைவாக நடத்தப்படுகிறது என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கூறுகையில், கொரோனாவிலும் பொய்க் கணக்கு எழுதி அப்பாவி பொது மக்களை ஏமாற்றாதீர்கள். கொரோனா பரவல் குறைந்து வருகிறது என காட்டுவதற்காக பரிசோதனையைக் குறைப்பது விபரீதத்தை விளைவிக்கும். எண்ணிக்கையை செயற்கையாக குறைத்துக் காட்ட பரிசோதனையை குறைப்பது மக்கள் துரோகச் செயல். கோயம்பேடு வந்தோருக்கு டோக்கன் கொடுக்க முடியாத அரசு டாஸ்மாக் வருவோருக்கு டோக்கன் கொடுக்கிறது. கொரோனா இல்லை என்ற தோற்றத்தை சில நாட்களாக அரசு உருவாக்கி கொண்டிருக்கிறது என்று மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |