ராமநாதபுரத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலி ஆவணங்களை குடுத்து முயன்ற பெண் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் வெளிப்பட்டிணத்தை அடுத்துள்ள நாகநாதபுரம் பகுதியில் சீனிநாகூர்கனி மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சீனிநாகூர்கனியின் மகள் ஜமீல்ரியாத் மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அந்த விண்ணப்பத்துடன் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜமீல்ரியாத் சமர்ப்பித்த பிறப்பு சான்றிதழ் மீது சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பு சான்றிதழை அனுப்பு விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் ஜமீல்ரியாத் கொடுத்த பிறப்பு சான்றிதழ் போலியானது என தெரியவந்துள்ளது. இந்நிலையில் போலி ஆவணங்களை கொடுத்து பாஸ்போர்ட் பெற முயன்றது குறித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலக அதிகாரி அருண்பிரசாத் ராமநாதபுரம் மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.