ஸ்விட்சர்லாந்தில் போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டு வருவது தொடர்பில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள வாட் மாநிலத்தில் போலியாக கொரோனா சான்றிதழ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பில், காவல்துறையினர் 4 நபர்களை கைது செய்திருக்கிறார்கள். வாட் மாநிலத்திலுள்ள, மருந்தகத்தின் பணியாளர்கள், தங்களுக்கு அறிமுகமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் சான்றிதழ்கள் அளித்திருக்கிறார்கள்.
சில சமயங்களில், அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல், பரிசோதனை மேற்கொள்ளாமல் பணத்திற்காக சான்றிதழ்களை விற்பனை செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த மாநிலத்தை சேர்ந்த 100 நபர்களுக்கு போலியாக கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டது தெரியவந்தது.
இவ்வாறு சட்டவிரோதமாக செயல்படுபவர்களுக்கு, 5 வருடங்கள் ஆயுள் தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. போலியாக சான்றிதழ்களை வழங்கிய நபர்கள் யார்? என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படும், என்றும் தற்போது கைது செய்யப்பட்ட 4 நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளார்கள்.
இதற்கிடையில், ஜெனீவா மாகாணத்திலும் போலியாக 200 சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் 400 பிராங்குகள் வாங்கிக்கொண்டு சான்றிதழ் கொடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.