Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் பண்ணது தப்புதான்…. புதுமண தம்பதியின் பாசம்…. கணவர் பிரிந்து செல்வதால் மனைவியின் செயல்….!!

விமான நிலையத்தில் கணவரை வழி அனுப்புவதற்காக மனைவி போலியான இ-டிக்கெட் மூலம் விமான நிலையத்திற்குள் வந்ததற்காக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சார்ஜா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு டிக்கெட் மட்டும் ஆவண பரிசோதனை நடைபெற்றுள்ளது. இந்தப் பரிசோதனை முடிந்த பின் அவர்கள் விமானநிலையத்தின் உட்பகுதிக்குள் அனுப்பப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள நவாஸ் ஷேக் மற்றும் அவருடைய மனைவி சனா இருவரும் இ-டிக்கெட்டை  காட்டிவிட்டு உள்ளே சென்றுள்ளனர்.

பின்னர் 1 1/2 மணி நேரம் கழித்து சனா மற்றும் வெளியே வந்துள்ளார். இதனை கண்ட பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது அவர் தான் பயணத்தை ரத்து செய்து விட்டேன் என் கணவன் மட்டும் பயணிக்கிறார் என்று கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகளுக்கு சந்தேகம் வரவே அவர்கள் இ-டிக்கெட்டை காட்டும்படி கூறியுள்ளனர். அவர் காண்பித்த இ-டிக்கெட்டில் பயணி அப்லோடு செய்ததற்கான எந்த முத்திரையும் பதிவிடவில்லை. எனவே பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரை நிறுத்திவைத்து விசாரித்தபோது சனா மற்றும் அவரது கணவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

இந்த சூழ்நிலையில் கணவர் வேலைக்காக சார்ஜா செல்ல தயாராகியுள்ளார். இதனால் கணவரை விட்டு பிரிய மனமில்லாமல் வழியனுப்புவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சனா வந்துள்ளார். ஆனால் பார்வையாளர்களுக்கு தற்போது சென்னை விமான நிலையத்தில் அனுமதி இல்லாத காரணத்தினால் அவர் போலியான இ-டிக்கெட்டை தயாரித்து அதன் மூலம் விமான நிலையத்திற்குள் வந்து சோதனை நடக்கும் பகுதிவரை சென்றுள்ளார்.

பின்பு அங்கு கணவருடன் சிறிது நேரம் கழித்த பின்னர் கணவரை சார்ஜா செல்லும் விமானத்தில் அனுப்பி வைத்துவிட்டு சனா மட்டும் வெளியே வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சனா “நான் செய்தது தவறுதான். என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அழுது கொண்டே கூறிய போதும் பாதுகாப்பு படை அதிகாரிகள் அதனை கண்டுகொள்ளாமல் விமானநிலையத்தில் மோசடி செய்ததாக கூறி அவரை கைது செய்து விமான நிலைய காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

Categories

Tech |