Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பண்றதெல்லாம் திருட்டு வேலை… கண்டுபிடிக்கப்பட்ட போலி ஆலை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மண் தயாரிக்கும் போலி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதோடு, அங்கு இருந்த எந்திரம், 60 டன் மணல் மற்றும் ஜே.சி.பி இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மணிவிழுந்தான் பகுதியில் சட்டவிரோதமாக ஏரியில் இருந்து மணல் திருடி, அதனை கட்டிடம் மற்றும் வீடுகளுக்கு கட்ட பயன்படுத்தப்படும் ஆற்று மணலாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மணிவிழுந்தான் பகுதியில் இயங்கி வந்த போலி மணல் ஆலைக்கு நேரில் சென்று ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் ஆத்தூர் தாசில்தார் அன்புச்செழியன் மற்றும் தலைவாசல் போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அந்த சோதனையில் ஏரியிலிருந்து மண்ணை திருடி வந்து பின் அதனை ஆற்று மணலாக சுத்திகரித்து லாரிகள் மூலம் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்ட அனுப்புவது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் திருட்டுத்தனமாக நடந்த இந்த மணல் விற்பனையை கண்டுபிடித்த போலீசார் மணல் தயாரிக்க பயன்படுத்தப்படும் இயந்திரம், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் 60 டன் மணல் போன்றவற்றை பறிமுதல் செய்து விட்டனர். இதையடுத்து அந்த இடத்தின் உரிமையாளரான தமிழரசன், தொழிற்சாலையின் உரிமையாளர் சதீஷ்குமார், பிரபாகரன், ஷாஜகான் மற்றும் பிரபு போன்ற ஐந்து பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு இவர்கள் கனிமவளதுறையினரிடம்  ஒப்படைக்கப்பட்டு அதன் பின் இந்த ஐந்து பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |