தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இன்ஸ்டாகிராமில் பெண் போல் நடித்து சகஜமாக பழகி 70க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டிய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமன் என்ற இளைஞன் பெண்களின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் பெயரில் பல பெண்களுடன் நட்பாக பழகி அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தெரிந்து வைத்துக் கொண்டு அவர்களின் புகைப்படங்களையும் வாங்கி வைத்து கொண்டு சில்மிஷ வேலையில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய ஆபாச படத்தை அவர்களுக்கு அனுப்பி தொந்தரவு செய்ததோடு, இச்சைக்கு இணங்க வில்லை என்றால் புகைப்படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளிக்கவே அவனை கைது செய்து ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர். இதில் பாதிக்கப்பட்ட 70 பெண்களில் ஒரு சில பெண்கள் மட்டுமே புகார் அளித்ததால் மட்டுமே அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு அப்பெண்கள் புகார் அளிக்கவில்லை என்றால் அந்த இளைஞன் தொடர்ந்து இந்த செயலை செய்து வந்திருப்பான். எனவே இது போன்ற விஷயங்களை பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.