போலீஸ் என கூறிக்கொண்டு போலி அடையாள அட்டையை காட்டி சென்னை காவல் ஆணையரை சந்திக்கச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
லேடி வில்லிங்டன் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்க காவல் ஆணையரை அழைப்பதற்காக ஜான் ஜெபராஜ் என்பவர் அக்கல்லூரி முதல்வர் உடன் சென்றிருந்தார். அப்பொழுது தான் சாலை பாதுகாப்பு காவல்துறை அதிகாரி என்று கூறி அடையாள அட்டையை காண்பித்து உள்ளே சென்றார்.
பின் காவல் ஆணையரின் பார்வையாளர் அறையில் அமர்ந்திருந்த அவரிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது அடையாள அட்டை போலி என தெரியவந்த நிலையில், வேப்பேரி காவல் நிலைய அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.