Categories
ஈரோடு மாநில செய்திகள்

கள்ளக்காதல்…. ஏமாற்றிய வாலிபர்….. கொரோனாவை வைத்து பழி வாங்கிய பெண்….!!

ஈரோட்டில் வாலிபருக்கு கொரோனா இருப்பதாக பெண் ஒருவர் பொய் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தனது செல்போன் மூலம் காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு இங்கே அம்மாபேட்டையில் இருக்கும் வாலிபர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாகவும் அவர் கட்டுப்பாடின்றி வெளியே சுற்றுவதால் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் புகார் அளித்தார்.

அவரது புகாரை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில், முற்றிலும் பொய் என்பது தெரிய வந்ததுடன், புகார் அளிக்கப்பட்ட வாலிபருக்கும், பெண்ணிற்கும் இடையே நீண்ட காலமாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளதாகவும்,

பின் வாலிபர் பெண்ணுடன் பேசுவதை முற்றிலுமாக நிறுத்தியதன் காரணமாக விரக்தி அடைந்த அவர் அவரை பழிவாங்க எண்ணி அவருக்குகொரோனா தொற்று இருப்பதாக பொய் புகார் அளித்துள்ளது. விசாரணையில் அப்பட்டமாக தெரிய வந்ததையடுத்து, பொய் புகார் அளித்து பீதியை கிளப்பிய பெண் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Categories

Tech |