Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலி சாமியாரின் பரிகாரப் பூஜையால்… பறிபோன உயிர்… திருப்பூர் அருகே கோர சம்பவம்..!!

திருப்பூர் அருகே தம்பதிகள் குழந்தை இல்லாத காரணத்தினால் பரிகாரம் செய்ய சென்றபோது கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியைச் சேர்ந்த தம்பதி ஆறுமுகம் ஈஸ்வரி. இவரது மகனுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆனது. ஆனால் இதுவரை குழந்தை இல்லை. குழந்தை இல்லாத காரணத்தினால் அவர்களை சுற்றியுள்ள உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் அவர்களை தாழ்த்திப் பேசி வந்தனர். இதன் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தனர். குழந்தை கிடைப்பதற்காக யார் என்ன கூறினாலும் அதை செய்வதற்கான மனநிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். எப்படியாவது குழந்தை பேறு பெற வேண்டும் என்பதே அவர்கள் நோக்கமாகக் கொண்டு இருந்தனர்.

இதனை சாதகமாக பயன்படுத்திய போலி சாமியார் கும்பல் பரிகார பூஜை செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி அதிகாலை 4:00 பூஜை செய்ய தம்பதியினரை வரவழைத்துள்ளனர். இதையடுத்து அவர்களை சரமாரியாக வெட்டி விட்டு நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர் இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |