தமிழகத்தில் கொரோனா சரியாகி வருவது போன்ற பொய்யான தோற்றத்தை அரசு வெளியிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு எந்த அளவிற்கு அதிகமாக பரவி வந்ததோ அதற்கு சரி நிகராக குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் நடந்த சின்ன சின்ன அலட்சியங்களால் மிகப்பெரிய பாதிப்பை தற்போது தமிழகம் சந்தித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வரும் நிலையில், அதன் பாதிப்பு குறைந்து வருவதாக அரசு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு க ஸ்டாலின் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது மென்மேலும் தீவிரமடைந்து வருகிறது.
ஆனால் தமிழக அரசு அதனை மறைத்து சரியாகி வருவதாக பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் அரசியல் உள்நோக்கமற்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழக அரசு மக்களின் உயிரை காக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மாவட்ட வாரியாக தினந்தோறும் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கான முடிவுகள் தினந்தோறும் அரசின் செய்தித் துறை சார்பில் தொடர்ந்து வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.