Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கீழே விழுந்து… வசமாக சிக்கிய திருடர்கள்… சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் திருட முயன்ற 2 இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியில் உள்ள பெரியார்நகர் காலனியில் சந்தோஷ்குமார்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் ஜன்னல் வழியாக இரண்டு இளைஞர்கள் செல்போனை எடுக்க முயன்றுள்ளனர். முயன்றுள்ளார். ஆனால் அந்த இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். அப்போது சந்தோஷ் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளனர். இதனையடுத்து இந்த இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி அங்கிருந்து ஓடியுள்ளனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கல்லில் இடித்து கால் தடுமாறி இருவரும் கீழே விழுந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இருவரையும் பிடித்து மோகனூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன்(19), விக்ரம்(19) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பரமத்திவேலூர் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |