Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதிகமா விளையும் இடமே இதுதான்..! திடீர் விலை வீழ்ச்சியால்… விவசாயிகள் வருத்தம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தக்காளிகள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் அவற்றை சாலையோரம் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அருகே பாப்பம்பட்டி, வேலாயுதம்பாளையம்புதூர், கரடிக்கூட்டம், நெய்க்காரப்பட்டி ஆகிய கிராமங்களில் சாகுபடி செய்யப்படும் தக்காளிகள் ஒட்டன்சத்திரம், பழனி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மார்க்கெட்டுகள் ஊரடங்கு காரணமாக செயல்படாததால் தக்காளி விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர்.

மேலும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 14 கிலோ தக்காளி ரூ.150 முதல் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அவை ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் தக்காளிகளை கொள்முதல் செய்ய போதிய அளவில் வியாபாரிகளும் வராத காரணத்தினால் சாகுபடி செய்யப்பட்ட தக்காளிகளை தற்போது சாலையோரத்தில் கொட்டும் அவநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |