கள்ள உறவுக்கு தடையாக இருந்த 3 வயது மகனை அடித்துக் கொலை செய்த தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜிட்டிலுமேடு என்ற பகுதியில் வசித்து வரும் சுரேஷ் என்பவரின் மனைவி உதயா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவருக்கும் இடையே தொடருந்து தகராறு ஏற்பட்டு வந்ததால் மனைவி உதயா இரண்டு வருடமாக கணவனை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த கட்டிட வேலை பார்க்கும் பாஸ்கர் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து இந்த நட்பு கள்ளஉறவாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு 3 வயது சிறுவன் தடையாக இருந்ததால், பெற்ற தாயே சிறுவனை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார். ஒருநாள் வீட்டிற்கு வந்த பாஸ்கரன் சிறுவன் அழுது கொண்டிருப்பதைப் பார்த்து இரும்பு கம்பியால் அடித்துள்ளார். அதற்கு தாயும் அவரின் கையில் இருந்த இரும்பு கம்பியை வாங்கி அந்த மூன்று வயது சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் குழந்தையை தூக்கிக்கொண்டு பேச்சு மூச்சின்றி இருப்பதாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தையின் உடம்பில் இருக்கும் காயத்தைப் பார்த்து, சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாய் உதயா மற்றும் பாஸ்கரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது உண்மையை ஒப்புக் கொண்ட அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.