Categories
மாநில செய்திகள்

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க… காதலி போட்ட திட்டம் ” 6 பைக் நாசம் ஆயிருச்சு”..!!

கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 6 வாகனங்களும் தீயில் கருகி சாம்பல் ஆனது. இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அங்கு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்த போது ஒரு பெண் வந்து ஒரு வாகனத்திற்கு தீ வைத்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அந்த குடியிருப்பில் வசித்து வரும் பழனி குமார் என்பவரின் கள்ளக்காதலி தான் அந்த பெண் என தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் விசாரித்தபோது அவர் தனியார் வங்கியில் வேலை செய்து வருவதாகவும், அப்பகுதியில் பணிபுரிந்த அதே பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது தெரியவந்தது.

இந்த கள்ளத்தொடர்பில் திவ்யாவுக்கும் பாபு பழனிகுமார் என் மனைவிக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதால் அவரை பழிவாங்கும் நோக்கில் நேற்று முன்தினம் இரவு அமுதாவின் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த 6 மோட்டார் வாகனங்களும் தீ பரவி எரிந்து நாசமானது. இதையடுத்து திவ்யா மீது மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Categories

Tech |