Categories
அரசியல் மாநில செய்திகள்

பொய்யான ஸ்டாலின் அறிக்கை…! ”திருப்பி விட்ட அமைச்சர்” ஷாக் ஆன திமுக …!!

திமுக தலைவர் முக.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 17ஆம் தேதி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனையை அறிக்கை மூலமாக விமர்சித்திருந்தார். அதில், தமிழகத்தில் மே 7-ஆம் தேதி செய்யப்பட்ட பரிசோதனை எண்ணிக்கை 14102, இது படிப்படியாக குறைக்கப்பட்டு மே 6-இல் வெறும் 8270. பரிசோதனைகள் ஏன் 40 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. பரிசோதனைகளை குறைத்து நோய் தொற்று குறைகிறது அல்லது நோய் தொற்று இல்லை என போலியாக காட்ட நினைக்கிறதா தமிழக அரசு?

பேராபத்தாக மாறும்:

கொரோனா பரிசோதனைக் கருவிகள் வாங்கியதில் ஊழல் செய்தது ஆளும் அதிமுக அரசு. பரிசோதனை செய்வதற்கான ஆர்டிபிசிஆர் உபகரணம் போதுமான அளவு இல்லையா? ரேப்பிட் டெஸ்ட்டுகள் இல்லையா?  அல்லது கருவிகள் இருந்தும் பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கெடுபிடி செய்து கொண்டிருக்கிறீர்களா ? பரிசோதனைகள் செய்யாமல் கொரோனா நோய் பரவல் இல்லை என்று சொல்லிக்கொள்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது, ஆபத்தை மறைக்க மறைக்க அது பேராபத்தாக மாறும்.

பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். மாவட்ட வாரியாக பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஒளிவு மறைவின்றி வெளியிடுங்கள். அதன் மூலம் நோய் பரவல் இல்லை என்பதை நிரூபியுங்கள். பொய்க்கணக்கு எழுதி பொழுது போக்காதீர்கள். அப்பாவிப் பொது மக்களை ஏமாற்றாதீர்கள்: வரலாற்றுப் பழியை  வாங்கி சுமக்காதீர்கள் என்று ஆளும் அரசை கடுமையாக முக.ஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

இதில் முக்கியமாக பொய்க்கணக்கு எழுதி பொழுதுபோக்காதீர்கள் என்று கொரோனா பரிசோதனை குறித்து பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்தார். முக.ஸ்டாலினின் இந்த கருத்து பல்வேறு கேள்வியை எழுப்பிய நிலையில், திமுகவுக்கே டப் கொடுக்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கருத்து தெரிவித்ததால் எதிர்க்கட்சியினர் நடுங்கி போயுள்ளனர்.

வேதனை:

நேற்று கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், முக.ஸ்டாலின் கருத்து குறித்து விளக்கம் அளித்தார்.  அதில், டெஸ்ட் குறைவா இருக்குது, அது போலியான தகவல் அப்படின்னு வார்த்தைகளை பேசுறது மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய செயலாகும் என்று வேதனை தெரிவித்த அமைச்சர்,கொரோனா சோதனையை குறைத்து செய்கின்றோம் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் கருத்து முற்றிலும் தவறானது என்று விளக்கம் அளித்தார்.

10, 585 டெஸ்ட்:

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் 16ஆம் 8,270  பரிசோதனை செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளது பொய்யானது. அன்று தமிழகத்தில் 10, 585 டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது என அதற்கான ஆதாரத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், டெஸ்ட் பொறுத்தவரை ஒரே நாளில் இவ்வளவு தான் என்று நிர்ணயிக்க முடியாது, அரசும் நிர்ணயிப்பது அல்ல. இன்று எத்தனை பேர் விமானத்தில் வந்தார்கள், ரயில் மூலமாக வந்தார்கள், பிற மாவட்டங்களிலிருந்து நுழைகிறார்கள் என்ற அளவினை பொறுத்து சோதனை செய்யப்படுகின்றது என்று பதிலளித்தார்.

108 நாட்கள் பணி:

மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள்,  அரசு இயந்திரம் ஒட்டுமொத்தமாக உணர்வோடு கிட்டத்தட்ட 108 நாள், நான்காவது மாதமாக தொடர்ந்து ஊண் உறக்கம் இன்றி பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.  ஒன்றை கூட  மறைக்க முடியாது. 100%  RT-PCR டெஸ்டை பதிவேற்றம் செய்கிறோம். ஆக்கபூர்வமான கருத்துக்களை சொல்லலாம், விமர்சனங்கள் என்ற பெயரில் தயவு செய்து அவர்களை பழி போடுவது என்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

பதிலடி:

பரிசோதனையை குறைவாக செய்கிறார்கள், குறைத்து எழுதுகிறார்கள் என்றல்லாம் திமுக தலைவர் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆதாரப்பூர்வமான தகவலை ஆதாரத்துடன் தகவலை வெளியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், திமுகவின் அறிக்கை பொய்யாக எழுதப்பட்டது என ஸ்டாலின் விமர்சனத்தை அவருக்கே திருப்பி விட்டுள்ளார். இது திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Categories

Tech |