இன்றைய இளைஞர்கள் மது பழக்கத்தினாலும், போதைப் பழக்கத்தினாலும் தங்களுடைய வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கின்றனர். மது வீட்டிற்கும் நாட்டிற்கும் உயிருக்கும் கேடு என்ற வாசகம் மதுபாட்டில்களை பொருத்தப்பட்டு இருந்தாலும் கூட அதை கண்டுகொள்ளாமல் தங்களுடைய உயிர்களுக்கு வைத்துக் கொள்கின்றனர். மதுப் பழக்கத்தினால் சில குடும்பங்களே சீரழிந்து நடுத்தெருவிற்கு வந்திருக்கிறது. ஆண்கள் தான் அவ்வாறு இருக்கிறார்கள் என்றால் பெண்களும் தாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் விதமாக ஆந்திராவை சேர்ந்த பெண்கள் சிலர் விடுமுறை நாளை கொண்டாடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
இதையடுத்து காரில் இருந்து அவர்கள் மது குடித்ததை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மது குடிக்கக்கூடாது என்று எந்த விதிமுறையும் இந்தியாவில் கிடையாது. இருப்பினும் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. எனவே எப்போதாவது பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும் என்ற நம்பிக்கையில் பலர் இருக்கும் நிலையில் தற்போது பெண்களும் மது வை நோக்கி செல்வது வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதற்காக ஆந்திர காவல்துறையினர் அந்த பெண்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.