Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குடும்பத் தகராறு… “துடிக்கத் துடிக்க தம்பி மனைவியை”…. அண்ணன் கைது..!!

குடும்பத் தகராறில் தம்பி மனைவியை கொலை செய்த நர்சரி பள்ளியின் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் ஈவிஎஸ் நகரை சேர்ந்த ராஜகோபால் என்பவர் திருக்கண்ணமங்கையில் நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். இவரது தம்பி சுந்தரமூர்த்தி. இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சொர்ணபிரியா. இருவரும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு இரு மகன்கள் உள்ளனர். ஊரடங்கு காரணமாக திருவாரூரில் அண்ணன் வீட்டில் தங்கி இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

நேற்று இரவு ராஜகோபாலுக்கும், தம்பி மனைவி சொர்ணாபிரியாவுடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ராஜகோபால் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பிரியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனால் பள்ளி நிர்வாகி ராஜகோபாலை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தையை வைத்து நர்சரி பள்ளி நடத்தும் நிர்வாகியை இவ்வாறு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |