Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“குடும்ப தகராறு” மனஉளைச்சல்…. போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை….. சென்னையில் சோகம்…!!

சென்னையில் குடும்ப தகராறு காரணமாக போலீஸ் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை  செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் சென்னை ராயப்பேட்டையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் உள்ளதாக கூறப்படும் நிலையில், ராமுக்கும் அவரது மனைவி காமினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் நிலையில், நேற்றைய தினம் ராமு குடித்து விட்டு வீட்டிற்கு சென்றதால் வழக்கம்போல் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் சண்டை முற்றவே வார்த்தைகளை அள்ளி தெளித்து உள்ளார் ராமுவின் மனைவி. இதனால் மனமுடைந்த அவர் தனது வீட்டின் உள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின் இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட விரைந்து சென்ற அதிகாரிகள் இறந்த  போலீஸ் அதிகாரி ராமுவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |