Categories
பல்சுவை

“குடும்ப எழுத்தறிவு தினம்”..கற்றல் திறனை மேம்படுத்த…. உலகை ஒன்றாக சுற்றி வாருங்கள்…!!

ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைகளுடன் கற்றறிவு தொடர்பான திறன்களை வளர்த்துக் கொள்ளும் பொருட்டு குடும்ப எழுத்தறிவு தினம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 27-ஆம் தேதி குடும்ப எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் ஒரு குடும்பமாக படிப்பது மற்றும் கல்வி அறிவு தொடர்பான பிற திறன்களை வளர்ப்பது போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் 1999ஆம் ஆண்டு முதல் ஆயிரக்கணக்கான நூலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்வியறிவு அமைப்புகள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து திறனை வளர்த்துக்கொள்ள விரும்பும் எந்த ஒரு நபருக்கும், ஏபிசி அமைப்பு இலவச கற்றல் மற்றும் விளம்பர ஆதாரங்களை உருவாக்குகிறது.

ஒவ்வொரு பெற்றோரும் தனது குழந்தைகளுடன் ஒவ்வுறு நாளும் சுமார் 2௦ நிமிடங்கள் குடும்பமாக அமர்ந்து வாசிப்பது, அறிவு சம்பந்தப்பட்ட திறன்களை வளர்த்துக் கொள்வதன் மூலம் குழந்தையின் கல்வியறிவை மேம்படுத்தலாம். இது ஒவ்வொரு பெற்றோரின் சுய அறிவையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த 2021 ஆம் ஆண்டு குடும்ப எழுத்தறிவு தின மையப் பொருளாக ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் தங்கள் கற்பனைகளை பயன்படுத்தி இந்த உலகை ஒன்றாக சுற்றி பார்த்து மற்றொரு கலாச்சாரத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக பயணத்தை திட்டமிடுங்கள் என்று வகுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |