லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி பலியான நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் சகாயம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சகாயம் தனது மனைவி மற்றும் உறவினரான சாரதா போன்றவர்களுடன் இரவு நேரத்தில் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இவர்கள் அனைவரும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளனர். அதன் பின் சகாயத்தின் மோட்டார் சைக்கிள் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென நிலைதடுமாறி அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சகாயம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து படுகாயம் அடைந்த உஷா மற்றும் சாரதா ஆகிய 2 பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.