Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் சென்ற குடும்பத்தினர்… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

சாலையை கடக்க முயன்ற கார் மீது அரசு பேருந்து மோதியதில் 2 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் வசித்து வரும் ராஜாமுகமது அவரது மனைவி சபீரன்ஜமீலா உட்பட அவரது குடும்பத்தினர் 5 பேர் காரில் அபிராமமத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் இளையான்குடிக்கு திரும்பியுள்ளனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் அருகே உள்ள மதுரை-பரமக்குடி நான்கு வழி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக திருப்பூருக்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாரதவிதமாக ராஜாமுகமது சென்ற வாகனம் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரில் இருந்த ராஜாமுகமது மற்றும் முஹம்மது ஆரிப் ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் சபீரன் ஜமீலா ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பார்த்திபனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் தர்மராஜ் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |