Categories
அரசியல் மாநில செய்திகள்

“காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல்” RS பாரதி கருத்து ..!!

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று  திமுக_வின் RS பாரதி தெரிவித்தார்.

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அதிகார பூர்வமாக வெளியிட்டார். திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருவாக்கிய இளைஞர் அணியை இனிமேல் உதயநிதி ஸ்டாலின் வழிநடத்துவார். திமுக தலைவர் இளைஞர் அணி  செயலாளராக இருந்து திமுகவின் பொருளாளர் , செயல் தலைவரை என்று உயர்ந்து தற்போது தலைவராக இருந்து வருகின்றார்.

Image result for RS பாரதி உதயநிதி

முக.ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளர் பொறுப்பில் இருந்து பொருளாளராக உயர்ந்ததும்  இளைஞர் அணி செயலாளராக வெள்ளக்கோவில் சாமி இருந்து வந்தார். இதை தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டது  குடும்ப அரசியல் என்ற விமர்சனம் திமுக மீது விழுந்துள்ளது. இது குறித்து  திமுக_வின் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில் , காழ்ப்புணர்ச்சி காரணமாகவே குடும்ப அரசியல் என விமர்சிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.

Categories

Tech |