Categories
அரசியல் மாநில செய்திகள்

”சொத்தை பாதுகாக்க குடும்ப அரசியல்” ஸ்டாலின் மீது அமைச்சர் பாய்ச்சல் …!!

சொத்துக்களை பாதுகாக்கவே திமுக தலைவர் மு க ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்து வருவதாக அமைச்சர் ஆர் வி உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். 

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தெருக்களில் வீடு வீடாக சென்று மக்களிடம் பிரச்சாரம் செய்த அமைச்சர் RB உதயகுமார் அதிமுக ஆட்சியில்தான் காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறி உள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல் தமிழக முதல்வர் பழனிசாமி வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். தங்களின் சொத்துக்கள் தங்களை விட்டு வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக மு க ஸ்டாலின் திமுகவில் குடும்ப அரசியல் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Categories

Tech |