ஆஸ்திரேலியாவில் மழை காரணமாக சிம்சன் பாலைவனத்தில் சேற்றில் சிக்கி தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் ஹெலிகாப்டர் மூலம் சிம்சன் பாலைவனத்தில் தவித்துக்கொண்டிருந்த 4 பேருக்கு உணவு பொருள்கள் வழங்கப்பட்டுள்ளது. சிம்சன் பாலைவனத்தின் வழியாக சென்ற வேன் ஒன்று கனமழையின் காரணமாக சேற்றில் சிக்கி நின்றது. இந்த நிலையில் அந்த வேனுக்குள் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டரில் சென்று சாட்டிலைட் போன் ஒன்றையும், உணவு பொருள்களையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீசியுள்ளனர்.