Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் மீண்டும்…. பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது – ராகுல் காந்தி…!!

இந்தியாவில் மீண்டும் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண்சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் பிரபலங்கள் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் 78 ஆகி நாட்களாகி நிலையிலும் பேச்சுவார்த்தையில் இதுவரை பெரிய சமரசம் ஏற்படவில்லை.

இந்நிலையில் டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மக்களவையில் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க் கட்சியினர் மௌன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து பேசிய கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் நிலத்தை இழப்பார்கள், சிறு விவசாயிகள் இருக்கமாட்டார்கள், இந்தியாவை மீண்டும் பஞ்சம் உருவாக வாய்ப்புள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களை நசுக்கும் சட்டத்தை அரசு அமல்படுத்துகிறது. வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானியங்கள் அழிக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |