Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல நடிகர் அமிதாப்பச்சனின் பெயர், குரல், புகைப்படத்தை உபயோகிக்க தடை….. டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மாஸ்திரா மற்றும் குட்பை திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் 2 முறை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் அமிதாப் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதாவது தன்னுடைய பெயர், குரல் மற்றும் போன்றவற்றை பயன்படுத்தி போலி கோடீஸ்வரர் நிகழ்ச்சி, லாட்டரி மோசடிகள் போன்றவைகள் நடைபெறுவதாகவும், போஸ்டர்கள் மற்றும் ஆடைகளில் என்னுடைய புகைப்படத்தை பயன்படுத்தி வணிக ரீதியிலான நோக்கத்தில் சம்பாதிக்கிறார்கள் என்றும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய முன் அனுமதியின்றி தன்னுடைய பெயர், புகைப்படம் மற்றும் குரல் போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அமிதாப் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. மேலும் இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நடிகர் அமிதாப் பச்சனின் முன் அனுமதி இன்றி அவருடைய பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என தடை விதித்துள்ளது.

Categories

Tech |