Categories
சினிமா தமிழ் சினிமா

விக்ரம் வேதா ரீமேக்கில் பிரபல நடிகர்…. வெளியான தகவல்…!!

விக்ரம் வேதா ரீமேக்கில் இணைந்த புதிய நடிகரின் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “விக்ரம் வேதா” திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்கின்றனர். அதில் மாதவன் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சயீப் அலி கானும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் அமீர் கானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் அமீர்கான் இப்படத்தில் இருந்து வெளியேறி உள்ளார். ஆகையால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க புதிய நடிகரை தேர்வு செய்துள்ளனர். அதன்படி விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |