நடிகர் சேதுராமன் மறைந்து ஓராண்டு ஆனதை எண்ணி அவரது மனைவி சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா, சக்கபோடு போடு ராஜா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சேதுராமன். மேலும் தோல் சிகிச்சை மருத்துவரான இவர் திரை பிரபலங்களுக்கும் தோல் சம்பந்தப்பட்ட மருத்துவ சிகிச்சை வழங்கி வந்தார். அதன்பின் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் டாக்டர் சேதுராமன் இறந்து ஒரு வருடம் ஆனதை எண்ணி அவரது மனைவியான உமா சேதுராமன் சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உங்களை எப்போதும் பெயர் சொல்லி அழைத்ததில்லை. மா.. என்று அன்பாக அழைத்திருக்கிறேன். ஏனென்றால் உங்களை நேசிக்கிறேன், மதிக்கிறேன்.
என்னை சுற்றி இருந்தது நீங்கள் மட்டுமே. நான்கு ஆண்டுகளில் மீட்டிங், பயணங்கள், தினசரி நோயாளி அட்டவணை, பயிற்சி அமர்வுகள், உணவு, ஓய்வு என அனைத்திற்கும் உங்களுக்கே முன்னுரிமை அளிப்பேன்.
மேலும் நீங்க என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதை மட்டும் சிந்தித்து அவற்றை நிறைவேற்ற எனக்கு தெரிந்த சிறிய வழிகளில் உதவினேன். நீங்கள் கனவு கண்டதை ஒருபோதும் நிறுத்த வில்லை. உங்கள் கனவுகளை நிறைவேற்ற உதவுவதற்கு நான் ஒருபோதும் மறுத்ததில்லை” என்று பதிவிட்டுள்ளார்.