நடிகர் “மதுர் மிட்டல்” பாலியல் குற்றப் பிரிவின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் “மதுர் மிட்டல்” ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். ஹகின் பியர் நா ஹோ ஜாயே, சே சலாம் இந்தியா, பாக்கெட் கேங்ஸ்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடன் நெருக்கமாக பழகி வந்த பெண் ஒருவர் மதுர் மிட்டல் தன்னை அடித்து துன்புறுத்தி, மோசமான வார்த்தைகளால் திட்டி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தரப்பு வக்கீல் கூறியதாவது, பாதிக்கப்பட்ட பெண்ணை மதுர் மிட்டல் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார். அந்தப் பெண்ணின் கழுத்தில் 15 தடவை அடித்து தலை முடியை பிடித்து இழுத்து வலது கண்ணில் குத்திக் கீழே தள்ளியுள்ளார் என்று கூறியுள்ளார்.
புகாரின் விசாரணை செய்த போலீசார் மதுர் மிட்டல் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.