பிரபல தொழிலதிபரின் மகனும் நடிகருமான விஜய் வசந்த் தனது மனைவிக்கு திருமண வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான சென்னை-28, மங்காத்தா, பிரியாணி, நண்பன், வேலைக்காரன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய் வசந்த். வசந்த் அண்ட் கோ வின் உரிமையாளரான இவர் கன்னியாகுமரி தொகுதியில் நின்று போட்டியிட்ட வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து இவர் தற்போது அடுத்த கட்டமாக மக்களுக்கு உதவும் பணியில் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் பிரபல தொழிலதிபரின் மகனான விஜய் வசந்த் தனது மனைவி நித்யாவுக்கு திருமண நாள் வாழ்த்து கூறி அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் முதல் முதலாக பதிவு செய்துள்ளார். இந்த அழகிய புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
Happy Anniversary to my better half, Nithya !! Thank you for the memories.
It has been a great 11 years, but I guess the best is yet to come. 🙂 pic.twitter.com/7nmGRWPAYP— VijayVasanth (@iamvijayvasanth) May 19, 2021