ரஜினி கமலுக்கு முன்பே ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராஜ்கிரண். இவர் 1995ம் ஆண்டு வெளியான ”என் ராசாவின் மனசிலே” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து 1996ஆம் ஆண்டு இவர் கேவி பாண்டியன் இயக்கத்தில் கமிட்டான திரைப்படம் ”மாணிக்கம்”.
இந்நிலையில், இந்த படத்திற்கு இவர்1 கோடியே 10 லட்சம் சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினி கமலுக்கு முன்பே ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் இவர் தான் என இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.