மகனுடன் இருக்கும் பிரபல நடிகர் இனி திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் பலரது திருமண வாழ்க்கை வெவ்வேறு விதமாக இருக்கும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவர் மகனை மட்டும் வைத்துக்கொண்டு இனி திருமணம் வேண்டாம் என்ற முடிவை எடுத்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பிரபல பாலிவுட் நடிகரான துஷார் கபூர் மருத்துவ உதவியுடன் ஒரு மகனை பெற்றுக் கொண்டு தான் சந்தோஷமாக இருப்பதாகவும் இனி தனது வாழ்க்கை முழுவதும் அவன் உடனே செலவழிக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் கூட நான் திருமணம் குறித்து ஆசை பட மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.