‘விருமன்’ படத்தில் பிரபல நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிக்கிறார்.
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”விருமன்”. இந்த படத்தில் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
மேலும், யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் பிரபல நடிகர் மனோஜ் பாரதிராஜா நடிக்கிறார் என தகவல் வெளியான நிலையில், தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மனோஜ் பாரதிராஜா ” உன்னோடு இணைந்து பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என படப்பிடிப்பில் கார்த்தியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
#viruman
It was lovely working with you karthi..your still the chubby kid i know since our child hood.loads of love da…❤❤❤❤@Karthi_Offl @onlynikil @iamkaushikr @kayaldevaraj pic.twitter.com/45QtpRVCCR— manoj k bharathi (@manojkumarb_76) December 15, 2021