விஷ்ணு விஷால் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”FIR”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, தற்போது இவர் மோகன்தாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில், விஷ்ணு விஷால் தற்போது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். அதன்படி, சமூக வலைதள பக்கங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக அவர் கூறியுள்ளார். விரைவில் மீண்டும் சந்திக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Hello guys…
Takin a break is very important for life…Taking a break from social media for sometime..
See u soon 🙂— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) April 21, 2022