Master Chef, BB 5, Survivor ஷோக்களை தொகுத்து வழங்க பிரபல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகியவைகள் ஒன்றுக்கொன்று போட்டி போடும் வகையில் புதுப்புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் மாஸ்டர் செஃப்பும், ஜீ தமிழில் புதிதாக சர்வைவர் என்ற ஷோ தொடங்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 5 கூடிய விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்காக அதனை தொகுத்து வழங்கிவரும் பிரபல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழக்கும் விஜய் சேதுபதி ஒரு எபிசோடிற்கு ரூ. 50 லட்சமும், சர்வைவர் நிகழ்ச்சிக்காக ஆக்சன் கிங் அர்ஜுன் 5 கோடியும், பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கும் கமல்ஹாசன் ரூ.60 கோடியும் சம்பளமாக வாங்குகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.