Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகையின் சகோதரர் கொரோனாவால் மரணம்…. ரசிகர்கள் ஆறுதல்….!!!

பிரபல நடிகையின் சகோதரர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான ஏகன், கோவா, கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பியா பாஜ்பாய். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை பியா பாஜ்பாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு உதவும்படி கேட்டு வந்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் தனது சகோதரர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும், அவரைக் காப்பாற்ற உடனடியாக வெண்டிலேட்டர் வசதி தேவைப்படுவதால் தயவுசெய்து அவருக்கு உதவி செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார். ஆனால், சில மணி நேரத்தில் அவர் தனது சகோதரர் இறந்து விட்டார் என்ற சோக செய்தி பதிவிட்டார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் பியா பாஜ்பாய்க்கு தங்களது ஆறுதலை கூறி வருகின்றனர்.

Categories

Tech |