பிரபல நடிகை நிரோஷா ராம்கி சின்னத்திரைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நிரோஷா ராம்கி. இதை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வந்தார். பின் பிரபல நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின் நிரோசா சினிமா வாழ்க்கையில் இருந்து சற்று விலகி இருந்தார். அதன்பின் சின்னத்திரையில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா சீரியல் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரை பக்கமே வரவில்லை.
இந்நிலையில் நிரோஷா ராம்கி சொந்த தயாரிப்பில் புதிய சீரியலில் நடிக்க உள்ளார். மேலும் இந்த சீரியலில் புதுமுக நடிகை கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.