தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். அதன் பிறகு விஜய், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்த ஹன்சிகா மோத்வானி தெலுங்கு சினிமாவிலும் நடிக்கிறார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான மகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடிகை ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து தற்போது டிசம்பர் 4-ம் தேதி ஹன்சிகாவுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இவர் தன்னுடைய நெருங்கிய நண்பரும் பிசினஸ் பார்ட்டனருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களிடையே திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நடைபெற இருக்கிறதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹன்சிகா மோத்வானி விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.