Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணக் கோலத்தில் பிரபல நடிகை…. நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை என்று விளக்கம்…!!

நடிகை வேதிகா திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முனி, பரதேசி, காஞ்சனா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. இவர் தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணக் கோலத்தில் இருப்பது போல ஒரு வெள்ளை கவுனை அணிந்து புகைப்படம் ஒன்றை எடுத்து பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்து ரசிகர்கள் தனக்கு திருமணம் என்று நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவர் புகைப் படத்துடன் சேர்த்து இன்னொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை. இது விளம்பரத்திற்காக எடுக்கப்படும் புகைப்படம். இது என்னுடைய திருமண புகைப்படம் அல்ல என்று விளக்கமளித்துள்ளார்.

https://www.instagram.com/p/CMCA4sLlk7R/

Categories

Tech |