Categories
உலக செய்திகள்

வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல நடிகை…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…!!!!

அமெரிக்க நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சென்ற வாகனம் குடியிருப்பின் மீது மோதி தீ விபத்து ஏற்பட்டதில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஆனி ஹெச் என்ற நடிகை கடந்த 1997-1998 காலகட்டங்களில் புகழின் உச்சியில் இருந்தவர். இந்நிலையில் நேற்று அவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஒரு குடியிருப்பின் மீது மோதினார். உடனே, வாகனம் தீ பற்றி எரிந்தது.

அதனைத்தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் 60 பேர் ஒரு மணி நேரமாக கடுமையாக போராடி நெருப்பை கட்டுப்படுத்தினர். வாகனத்தில் மாட்டிக்கொண்ட ஆனி ஹெச், நெருப்பிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார்.

அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகனத்தை அவர் தான் ஓட்டிச்சென்றாரா? வாகனத்தை ஓட்டும் போது மது அருந்தியிருந்தாரா? என்பது குறித்த ஆய்வு நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |