Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவை திடீரென கன்னத்தில் அறைந்த பிரபல நடிகை….. பதறிப்போன இயக்குனர்….. நடந்தது என்ன….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நடித்த பல சூப்பர் ஹிட் படங்கள் மூலம் குறுகிய காலத்திலேயே நயன்தாரா முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். நடிகை நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கிய சில காலம் படங்களில் இருந்து விலகி இருந்த நிலையில், ராஜா ராணி படத்தின் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்தார். கடந்த ஜூன் மாதம் 9-ம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு காதல் திருமணம் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்றது.

இந்த தம்பதிகளுக்கு அண்மையில் இரட்டை ஆண் குழந்தை வாடகைத்தாய் முறையில் பிறந்தது. இந்நிலையில் நடிகை நயன்தாரா நேற்று தன்னுடைய 38-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு நடிகை நயன்தாரா பற்றிய பல சுவாரசியமான செய்திகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நயன்தாரா மற்றும் ஜீவா நடிப்பில் வெளியான திருநாள் படத்தை இயக்கிய இயக்குனர் ராம்நாத் நடிகை நயன்தாராவுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, திருநாள் படத்தில் நயன்தாராவை அவருடைய அம்மா ஒரு காட்சியில் கன்னத்தில் அறைவது போன்று இருக்கும். நான் நயன்தாராவை கன்னத்தில் அறைய வேண்டும் என்று அம்மா கதாபாத்திரத்திடம் கூறினேன். ஆனால் அவர் எப்படி அடிக்க முடியும் என்று தயங்கினார். ஆனால் மைக்கில் சொன்னவுடன் திடீரென கன்னத்தில் அடித்துவிட்டார். இதனால் நான் பயந்து போய் நயன்தாராவிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். ஆனால் நயன்தாரா கோபப் படாமல் காட்சி நன்றாக வந்துள்ளதா என்று மிகவும் கூலாக கேட்டார் என்று கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ராம்நாத் நயன்தாரா பற்றி சொன்ன தகவல் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |