பிரபல நடிகை ஜெயசித்ரா நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கியுள்ளார்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனாவை கட்டுபடுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பலர் வேலையின்றி இருப்பதால் பொருளாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வரும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்ற பிரபல நடிகை ஜெயசித்ரா 200க்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.