பிரபல நடிகை நடுக்கடலில் திருமணம் கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஜி மோகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘திரௌபதி’. சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர்தான் ஷீலா. இவர் டூ லலேட், யோகிபாபுவின் மண்டேலா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஷீலாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அவர் நடுக்கடலில் படகில் திருமணக் கோலத்தில் அமர்ந்து இருக்கிறார். நடிகை ஷீலா கடந்த 2014 ஆம் ஆண்டு நாளைய இயக்குனர் நிகழ்ச்சில் பங்கேற்ற தம்பி சோழர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.