மீனா டிரெண்டாக இருக்கும் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை மீனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்ததன் மூலம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/CaevCJWvIUE/
இந்நிலையில், சமூகவலைதளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாக இருக்கும் வீடியோ பதிவை இவர் வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவரும் இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.